Dear MOTHERLAND, LISTEN! - Part 2
Dear MOTHERLAND, LISTEN! - Part 2
-By SWAMI VIVEKANANDA
Author – S. SHAALINI
The Energies of Mind
1) Take an idea. Make that idea as your life concept. Dream it. Live by that notion. May every cell of your brain, muscles, nerves and every part of your body be filled with that idea. In that case, exclude all other comments. This is the way to success. If we really want to be blessed soul, and if we want to make others , then we need to go deeper into ourselves.
2) As this energy that grows concentration gets increases, more and more knowledge could be gained. Because, this is the only way to gain knowledge. The inferior cobler, if done his job with much of his concentration, the better the slippers are, means the job is done better there. Likewise, the chef who concentrates his mind more on what he does, also cooks the best food of his career whenever he does it.
It may be earning of money, worshiping of God, or any other job, as the mind grows the power to concentrate, you can do it better. This is a powerful voice, the only knocking, that open the door of nature's wisdom and makes to flow out the light flood.
3) Brahmanism is the foundation of all morality and all religions. The mind, which has not been controlled, and left unchecked, will drag us down more and more forever; and will split us up and ruin us. But the heart that is controlled and preserved in the right way will keep us safe and protected; and set us free.
4) Ninety percent of the energy of thought is wasted by the common man. Therefore, he continues to make big mistakes. But, the will of a well-trained mind of a man never goes wrong.
5) Good thoughts and bad thoughts each have their own unique strength. They are filled in this universe. As their vibrations continue to exist, they remain in shape of idea until those thoughts are put into action.
For example, the energy in a man's hand is hidden until he raises his hand and acts on that energy. We are the owners of both our good and evil thoughts. When we cleanse ourselves and become instrument of good intentions, they enter us. Good souls do not adapt or accept evil thoughts that easily.
-----------------------------------------------------
மனத்தின் ஆற்றல்
1) ஒரு கருத்தை எடுத்துக்கொள். அந்த ஒரு கருத்தையே உனது வாழ்க்கை மயமாக்கு. அதையே கனவு கான். அந்த கருத்தை ஒட்டியே வாழ்ந்து வா. மூளை , தசைகள் , நரம்புகள் , உன் உடலின் ஒவ்வொரு பாகத்திலும் அந்த ஒரு கருத்தே நிறைந்திருக்கட்டும். அந்த நிலையில் மற்ற எல்லா கருத்துக்களையும் தவிர்த்து விடு. வெற்றிக்கு இதுதான் வழி. நாம் உண்மையிலேயே பாக்கியவான்களாக விரும்பினால்- மற்றவர்களையும் பாக்யவான்களாக்க விரும்பினால்- நம்முள் நாம் மேலும் ஆழ்ந்து சென்றாக வேண்டும்.
2) ஒருமுகப்படுத்தும் இந்த ஆற்றல் வளர வளர , அதிக அளவில் அறிவைப் பெறலாம். ஏனென்றால் , இந்த வழிதான் அறிவைப் பெறுவதற்கு உரிய ஒரே வழி. தாழ்ந்த நிலையில் உள்ள செருப்புக்கு மெருகு போடுபவன் , மனத்தை அதில் அதிகம் ஒருமுகப்படுத்திச் செய்தால் , மேலும் சிறப்பாகச் செருப்புக்களுக்கு மெருகு பூசுவான். மனத்தை ஒருமுகப்படுத்திச் செய்யும் சமையற்காரன் மேலும் சிறந்த முறையில் உணவு சமைப்பான். பணம் சேர்ப்பதோ , கடவுள் வழிபாடோ அல்லது பெரு எந்த ஒரு வேலையானாலும் மனதை ஒருமுகப்படுத்தும் ஆற்றல் வளர வளர , மேலும் சிறப்பாக அந்த காரியத்தைச் செய்து முடிக்கலாம். இந்த ஒரு குரல் , ஒரே தட்டுதல் , இயற்கையின் கதவுகளைத் திறந்து ஒளி வெள்ளங்களை வெளியே பாய்ந்தோடச் செய்கிறது.
3) பிரம்மச்சரியம்தான் எல்லா ஒழுக்கங்களும் , எல்லா மதங்களுக்கும் அடித்தளமாக விளங்குகிறது. அடக்கப்படாமல் சரியான வழியில் செலுத்தப்படாத மனம் , நம்மை மேலும் மேலும் என்றென்றைக்குமாகக் கீழே இழுத்துச் சென்றுவிடும்; நம்மை பிளந்துவிடும். அழித்து விடும். ஆனால் அடக்கப்பட்டுச் சரியான வழியில் செலுத்தப்பட்ட மனமோ நம்மைக் காத்து இரட்சிக்கும்; நம்மை விடுதலை பெறச் செய்யும்.
4) சிந்தனையின் தொண்ணூறு சதவிகித ஆற்றல் சாதாரண மனிதனால் வீணாக்கப்படுகிறது. எனவே தெடர்ந்து அவன் பெரிய தவறுகளை செய்து கொண்டே இருக்கிறான். சரியான பயிற்சியைப் பெற்ற மனிதனின் மனமோ ஒருபோதும் தவறு செய்வதில்லை.
5) நல்ல எண்ணங்கள் , தீய எண்ணங்கள் ஆகியவற்றில் ஒவ்வொன்றும் தனித்தனியே வலிமை மிக்க ஆற்றலைப் பெற்றிருக்கிறது. இந்தப் பிரபஞ்சம் முழுவதிலும் அவை நிறைந்திருக்கின்றன. அவற்றின் அதிர்வுகள் தொடர்ந்து இருந்து வருவதனால் , அந்த எண்ணங்கள் செயலுக்கு வரும் வரையில் அவை கருத்து வடிவில் இருக்கின்றன. உதாரணமாக , மனிதனின் கையிலுள்ள ஆற்றல் , அவன் ஓர் அடி அடிக்கும் வரையிலும் , அவன் அந்த ஆற்றலுக்குச் செயல் வடிவு தரும் வரையிலும் மறைந்திருக்கிறது. நாம் நல்ல , தீய எண்ணங்களின் உரிமையாளர்களாக இருக்கிறோம். நாம் நம்மைத் தூய்மைப் படுத்தி நல்ல எண்ணங்களின் கருவிகளாக்கிக் கொண்டால் , அவை நம்முள் நுழைகின்றன. நல்ல ஆன்மா தீய எண்ணங்களை எளிதில் ஏற்பதில்லை.
- தொடரும்
Comments
Post a Comment