kadhaiyaa, Kaaviyama?
கதையா? காவியமா?
-கதாசிரியர், சி. ஷாலினி
காதல் கரை சேருமா? Ughh.. என் வாழ்க்கைல நான் கேட்ட முட்டாள் தனமான logic அது. காதல் ஒரு கடல்-னு சொன்னா அதுக்கு கரைகள் கூட தேவையா... காதலே கடல் ஆவேன்... கஷ்டமா என்ன? பாதை வேறு பயணம் வேறு.. ஓர் நூலில் இங்கே இனச்சதாரு?ஒரு நாள்ல 1440 தடவ அவளை மறக்க முயற்சி செஞ்சி தோற்க முடியுமா? கை கோர்த்தது மூளையும் மனசும் ... சூழ்நிலை சிறை பிடிச்சும் கண்கள் அவளோட கனவுகள் திரிக்குது... 365 நாள் 365 இரவுகள்.. முதல் காதல் கதையானு கேட்டா என் கிட்ட பதில் இல்ல.. ஏன்னா இங்க பொய் சொல்ற உத்தேசம் எனக்கில்லை... ஆனா இது என்னோட காதல் கதை... just me and her, கர்வம் தான்... 7.7 லட்சம் கோடி பேர் இருக்க உலகத்துல எனக்கு மட்டும் உரிமை இருக்க பொண்ணு அவ, Shri.. She is my girl. I could sense every inch of her no matter what.
சிலதெல்லாம் life-ல எப்பவும் மாறாது ... வெளிச்சத்தை பாக்க கருவறை இருட்ட ஜெயிக்க நான் ஓடுன முதல் பந்தயம், ருசிச்ச முதல் சொட்டு தாய் பால், கூட்டத்துல எட்டி பார்த்த முதல் வெட்கத்துக்கு 30 டிகிரிக்கு மேல தூக்க முடியாம கணத்த இமைகள், அவனோட வாசனை பகிர்ந்த அந்த நிமிஷம்...
எதும் மாறாது... equation-ல constant மாதிரி.. மீறி முயற்சி செஞ்சா... மொத்தமா zero.
வரலாறு கதைகள் சொல்லும்.. காதல் கதைகள்.. அது ஒருத்தர வாழவெச்சதும் உண்டு, அதுவே ஒருத்தர வீழ்த்துனதும், இங்க உண்டு.. எப்படி பாத்தாலும் எல்லாத்துக்கு பின்னாடியும் இருக்கறது காதல் தன... ஆனா கடைசி வர கதையா இருக்கனும்னு ஆச பட்றேன்.. ஏன்னா இங்க ஜெயிச்சா காதல் கதை nu சொல்வாங்க .. தோத்தா , காதல் காவியம்னு சொல்லுவாங்க.. முட்டாள் தனமா இருந்தாலும், இது கதையா, காவியமா?
--------------------------------------------------------------------------------------------------------------------------
என் கதைய தெரிஞ்சிக்கணுமா? Every Sunday 9pm... #Stay tuned
Nice work keep doing this 👌
ReplyDeleteThank you so much... Hope this makes you happy in following weeks :)
Deleteஅருமையான வரிகள்...
ReplyDeleteமிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கிறேன்
விரைவில் ஆரம்பிங்க தோழர்
நன்றி
Delete