Dear MOTHERLAND, LISTEN! - Part 1
Dear MOTHERLAND, LISTEN! - Part 1
-By SWAMI VIVEKANANDA
Author – S. SHAALINI
Faith and Strength
1) Trust, trust, trust, trust in us; Belief in God - This is the secret to glory. When you do not believe in yourself, your faith on thirty-three mythical Gods and the other Gods that the foreigner has got into you from time to time, has nothing to do with your success.
2) What you think is what you become. If you think yourself weak, you become weak. If you think yourself strong, you will become mighty.
3) Never say no. Never say I can't. Because you got an unlimited strength. Even time and space do not matter to you, when compared to your true nature. You can accomplish anything and everything. You are the Almighty.
4) You are children of God. Partners in immortal bliss. You got to be the perfect figure of the Universe in holy divine. Gods of the earth, you sinners! To call such a man as a sin. It is a blame imposed on human nature. Oh lions! Come on up. Get rid of the your sheep attire. You are from the pure source of Universe, free souls, immortal beings who got to be blissful.
5) Never mind the struggles and mistakes. I have never heard of a cow lying. But it will never become a human at any cost. So never mind these failures and such immoralities. Try to keep up to your goal a thousand times. Even if you fail a thousand times, try again to get it in your hand. Never ever give up.
6) The remedy for weakness is not to think about weakness. Instead, think about strength. Teach the people the strength that already comes from them.
7) You need to have a lot of perseverance and great willpower to succeed. The diligent one says, “I shall drink the sea”, and “The mountains shall be crushed by me”. Have such energy and such determination. Work hard. You will achieve your goal.
8) Don’t we have traditional music instruments in this country? Make our children listen to the greatness of such instruments. From childhood on, women also listened to such great music, the country has been transformed into an almost women's society.
9) Death is better than a living a life like an unaware grass. It is much more better to die on the battlefield than to survive with a failure.
10) Brother, why are you crying? There is no death or sickness in you. Why do you even cry? There is no sadness or no misfortune to you. You are not destined for change or death. You are happy. Stay in your soul.
11) Let people say what they want. Hold on to your own firm end. Then, of course, the rest of the world will come to your feet.
It don’t matter whether others say, believe him or not. But I say - trust in yourself first. That's the way it is. Believe in yourself - all the energies are within you. Recognize that and you release that energy. Say I am capable of achieving anything. If you do not care for the fall, the poison of the snake will become powerless.
12) One time when I was in Kaasi I was going through a path. On one side of the road, there was a large pool of water and on the other side a high wall. There were many monkeys in that manner.
The monkeys from the holy place kaasi are very attrocious. Sometimes rude. It seemed like they thought not to let me go on their path! So they grabed my feet by making sound to stop me heading. As they approached, I ran to escape. As I run, they followed me and bite.
I was told that there was no escape from the monkeys. But then I met an unfamiliar person on the way. He looked at me and said would stand up. I turned and fought the monkeys. They retreated and faded that the monkeys away. This is the lesson for all of life. Resist the terror. Stop fearing it. Life is to live, not to run.
--------------------------------------------------------------------------------
தாயகமே, கேள்! - பகுதி 1
-வழங்கியவர் சுவாமி விவேகானந்தர்
எழுத்தாளர் - சி. ஷாலினி
நம்பிக்கையும் வலிமையையும்
1) நம்பிக்கை , நம்பிக்கை , நம்பிக்கை , நம்மிடத்தில் நம்பிக்கை; கடவுளிடத்தில் நம்பிக்கை- இதுவே மகிமை பெறுவதன் ரகசியமாகும். உங்கள் முப்பத்து மூன்று கோடி புராண தெய்வங்களிடத்தும் மேலும் அவ்வப்போது உங்களிடையே அந்நிய நாட்டவர் புகுத்தியிருக்கும் இதர தெய்வங்களிடத்தும் நம்பிக்கை இருந்து , ஆனாலும் உங்களிடத்தே நம்பிக்கை இல்லாவிட்டால் உங்களுக்குக் கதிமோட்சமில்லை.
2) நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய். நீ உன்னை பலவீனன் என்று நினைத்தால் பலவீனனாகவே நீ ஆகிவிடுவாய். நீ உன்னை வலிமையுடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவனாகவே ஆகிவிடுவாய்.
3) இல்லை என்று ஒருபோதும் சொல்லாதே. என்னால் இயலாது என்று ஒருநாளும் சொல்லாதே. ஏனெனில் நீ வரம்பில்லா வலிமை பெற்றவன். உன்னுடைய உண்மை இயல்போடு ஒப்பிடும்போது காலமும் இடமும்கூட உனக்கு ஒரு பொருட்டல்ல. நீ எதையும் எல்லாவற்றையும் சாதிக்கக்கூடியவன். சர்வ வல்லமை படைத்தவன் நீ.
4) நீங்கள் கடவுளின் குழந்தைகள். அழியாத பேரின்பத்தின் பங்குதாரர்கள். புனிதமும் பூரணத்துவமும் பெற்றவர்கள். மண்ணுலகின் தெய்வங்களே , நீங்களா பாவிகள்! அப்படி மனிதனை அழைப்பது தான் பாவம். அது மனித இயல்பின்மீதே சுமத்தப்படும் பழிச்சொல் ஆகும். ஓ சிங்கங்களே! எழுந்து வாருங்கள். நீங்கள் செம்மறி ஆடுகள் என்ற மயக்கத்தை உதறி தள்ளுங்கள். நீங்கள் அமரத்துவம் பெற்ற ஆன்மாக்கள் , சுதந்திர ஆன்மாக்கள் , அழியாத திருவருளை பெற்றவர்கள்.
5) போராட்டங்களையும் தவறுகளையும் பொருட்படுத்தாதே. பசு ஒன்று பொய் பேசியதாக நான் எந்த காலத்திலும் கேள்வி பட்டதில்லை. ஆனால் அது பசுவே தவிர ஒருபோதும் மனிதனாகிவிடாது. எனவே இந்த தோல்விகளையும் இத்தகைய ஒழுக்கக்கேடுகளையும் ஒருபோதும் பொருட்படுத்தாதே. ஓராயிரம் முறை நீ உனது லட்சியத்தைக் கைக்கொள். ஆயிரம் முறை நீ தோல்வியுற்றாலும் மீண்டும் ஒரு முறை கைக்கொள்ள முயற்சி செய்.
6) பலவீனத்திற்கான பரிகாரம் , ஓயாது பலவீனத்தைக் குறித்துச் சிந்திப்பதல்ல. மாறாக வலிமையை குறித்துச் சிந்திப்பதுதான். மக்களுக்கு , ஏற்கனவே அவர்களுக்குள் இருந்து வரும் வலிமையைப்பற்றிப் போதிப்பாயாக.
7) வெற்றி பெறுவதற்கு நிறைந்த விடா முயற்சியையும் பெரும் மனவுறுதியையும் நீங்கள் கொண்டிருக்க வேண்டும். விடா முயற்சி பெற்றவன் சமூத்திரத்தையே குடித்து விடுவேன் , எனது சங்கல்பத்தால் மலைகள் நொறுங்கி விழுந்ததாக வேண்டும் என்று சொல்கிறான். அத்தைய ஆற்றலை , அத்தகைய மனா உறுதியை நீ பெற்றிரு. கடுமையாக உழை. உனது குறிக்கோளை நீ அடைவாய்.
8) இந்த நாட்டில் பேரிகைகள் செய்யப் படுவதில்லையா? தாரைகளும் தப்பட்டைப் பாறைகளும் இந்தியாவில் கிடைக்காமலா போய்விட்டன? இத்தகைய கருவிகளின் பெருமுழக்கத்தை , நமது குழந்தைகளாக கேட்கச் செய். பெண்களாக்கும் மேன்மை மிக்க இசைகளைக் குழந்தைப் பருவம் முதலே கேட்டு கேட்டு , இந்த நாடே கிட்டத்தட்டப் பெண்கள் நிறைந்த சமுதாயமாக மாற்றப் பட்டிருக்கிறது.
9) அறியாமை மிக்க உயிரற்ற புள் பூண்டு வாழ்க்கையைக்காட்டிலும் மரணமே மேலானது. தோல்வியை தழுவி உயிர் வாழ்வதைவிட போர்க்களத்தில் மாய்வதே மேல்.
10) சகோதரா , நீ அழுவதேன்? மரணமோ , நோயோ உனக்கில்லை. நீ அழுவதேன் சகோதரா? துன்பமோ துரதிருஷ்டமோ உனக்கு கிடையாது. சகோதரா , நீ ஏன் அழ வேண்டும்? மாற்றமோ மரணமோ உனக்கு விதிக்கப்பட வில்லை. நீ ஆனந்தமயமானவன். நீ உனது ஆன்மாவில் நிலைத்திரு.
11) மக்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டுமே. நீ உனது சொந்த உறுதியான முடிவில் பிடிப்புடன் இரு. பிறகு நிச்சயமாக மற்றவை நடந்தேறி உலகம் காலையில் பணிந்து கிடைக்கும்.
'இவனை நம்பு அல்லது அவனை நம்பு' என்று மற்றவர்கள் சொல்கிறார்கள். ஆனால் நான் சொல்கிறேன்- முதலில் உன்னிடத்திலேயே நீ நம்பிக்கை வை. அதுதான் வழி. உன்னிடத்தில் நீ நம்பிக்கை வை- எல்லா ஆற்றல்களும் உனக்குளேயே இருக்கின்றன. அதை உணர்ந்து நீ அந்த ஆற்றலை வெளிப்படுத்து . "நான் எதையும் சாதிக்க வல்லவன்" என்று சொல். நீ உறுதியுடன் விஷத்தை பொருட்படுத்தாதிருந்தால் , பாம்பின் விஷம் கூட சக்தியற்றதாகிவிடும்.
12) ஒரு சமயம் நான் காசியில் இருந்த பொது ஒரு பாதை வழியாக சென்று கொண்டிருந்தேன். அந்த பாதியின் ஒரு புறம் நீர் நிறைந்த ஒரு பெரிய குளமும் , மறு புறம் உயர்ந்த சுவரும் எழுப்பட்டிருந்தன. அந்த இடத்தில் பல குரங்குகள் இருந்தன.
காசியைச் சேர்ந்த குரங்குகள் மிகவும் பொல்லாதவை. சில சமயங்களில் முரட்டுத்தனமாக நடந்து கொள்ள கூடியவை. அவை தங்கள் பாதையில் என்னை செல்ல விடக்கூடாது என்ற நினைத்தன எனபோலும்! எனவே நான் செல்ல செல்ல அவை கிரீச்சிட்டுப் பெரும் சப்தமிட்டபடி என் கால்களை பற்றின. அவை நெருங்க நெருங்க நான் ஓட ஆரம்பித்தேன். ஆனால் நான் ஓட ஓட அவையும் பின் தொடர்ந்து ஓடி வந்து என்னைக் கடித்தன. அந்த குரங்குகளிடமிருந்து தப்பவே வழியில்லை என்று எனக்குப் பட்டது. ஆனால் அப்போது முன்பின் அறிமுகமில்லாத ஒருவரை வழியில் சந்தித்தேன். அவர் என்னை நோக்கி , 'குரங்குகளை எதிர்த்து நில்' என்று கூறினார். நான் திரும்பிக் குரங்குகளை எதிர்த்து நின்றேன். அவை பின்வாங்கி முடிவில் ஓடியே மறைந்தன. இதுவே வாழ்க்கை முழுவதற்கும் படிப்பினையாகும். பயங்கரத்தை எதிர்த்து நில். அஞ்சாமல் அதை எதிர்த்து நில்.
-தொடரும்
It was such an amazing motivation lines which I needed now I want you to continue your passion by writing this blog and i will always see you fly like a bird in the sky
ReplyDeleteThank you... working to offer you the best
Delete